search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி விஷம் குடித்து தற்கொலை"

    தென்னை மரங்கள் கருகியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 65). இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் தோட்டம் வைத்து தென்னை சாகுபடி செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்று விட்டதால் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு பாய்ச்சினார்.

    இருந்தபோதும் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் வேலுச்சாமியின் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் கருகத் தொடங்கின எவ்வளவோ முயற்சி செய்தபோதும் தென்னை மரங்களை காப்பாற்ற முடியவில்லை.

    தன் கண் முன்னே தென்னை மரங்கள் கருகியதால் கடும் மன உளைச்சலில் இருந்தார். எனவே தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். அதன்படி வி‌ஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

    வறட்சியின் காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர் அருகே மகன்கள் குடிக்க பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள குல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காசியப்பன் (வயது70). விவசாயியான இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் தனது மகன்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காசியப்பன் தனது மகன்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    இதனால் மனமுடைந்த காசியப்பன் கடந்த 19-ந்தேதி அன்று வீட்டில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவரை பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக காசியப்பன் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×